அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டத்தை சமாளிக்க டொனால்டு ட்ரம்ப் அரசாங்கம் H1-B விசாவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதனால் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு ரூ. 1200 கோடி வரை இழப்பு ஏற்படலாம் என சிரிசில் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிரிசில், கரோனா சூழல் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். பொருளாதார ஆண்டு 2021-இல் இந்தியாவின் 15 தலைசிறந்த நிறுவனங்களின் 23 சதவிகித லாபத்தில் 2.50 சதவிகிதம் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.