Latest International News - ஸ்வீடன் நாடாளுமன்றம் முன் தனியொரு ஆளாகப் போராடத் தொடங்கியவர் 16 வயதே ஆன கிரேட்டா தன்பெர்க். இவரைப்போல உலகெங்கும் உள்ள பல்வேறு இளம் சமூக செயற்பாட்டாளர்களையும் பருவநிலை மாற்றம் குறித்து உலகத் தலைவர்கள் மத்தியில் பேச ஐநா அழைப்புவிடுத்ததது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐநா பருவநிலை மாற்றம் நிகழ்வு நடந்தாலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்த நிகழ்வில் பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், திடீரென்று ஐநா வளாகத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த ட்ரம்ப், நரேந்திர மோடி உள்ளிட்ட சில முக்கியத் தலைவர்களின் பேச்சை மட்டும் கேட்டுவிட்டு கிளம்பினார்.
அமெரிக்கா அதிபரைப் பார்த்து முறைத்த சிறுமி ட்ரம்ப் அங்கு வந்தபோது, கிரேட்டா தன்பெர்க் அவரைப் பார்த்து முறைத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது. மற்றவர்களுக்கு வேண்டுமானால் நீங்கள் அமெரிக்க அதிபராக இருக்கலாம், ஆனால் என்னைப் பொறுத்தவரை, பருவநிலையை மேலும் மேலும் ஆபத்தில் தள்ளும் ஒருவர்தான் நீங்கள் என்ற ரீதியில் இருந்த அவரது பார்வை இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.
இதையும் படிக்கலாமே : "உலகம் அழிவதைவிட பணம்தான் உங்களுக்கு முக்கியம்" - ஐநாவில் சீறிய சிறுமி!