தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 20, 2019, 3:31 PM IST

ETV Bharat / international

'120 ஆண்டுகள் டைம் ட்ராவல் செய்தாரா கிரேட்டா தன்பெர்க்' - வைரலாகும் படத்தால் குழப்பம்!

ஐநா சபையில் உலகத் தலைவர்களை கேள்விகளால் சாடிய கிரேட்டா தன்பெர்க் 120 ஆண்டுகள் டைம் ட்ராவல் செய்து வந்தாரா என்ற குழப்பம் தற்போது கிளம்பியுள்ளது.

கிரேட்டா தன்பெர்க்

'உலகம் அழிவதை விட பணம்தான் உங்களுக்கு முக்கியம், எங்கள் கனவுகளையும் மகிழ்வுடன் இருக்க வேண்டிய குழந்தைப் பருவத்தையும் நீங்கள் திருடிவிட்டீர்கள்' என்று ஐநாவில் உலகத் தலைவர்களைத் தனது கேள்விகளால் சாடியவர் தான் இந்த கிரேட்டா தன்பெர்க்.

இவர் டைம் ட்ராவல் செய்தாரா என்ற குழப்பம் தற்போது வந்திருப்பதற்கு காரணம், 120 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த இந்த புகைப்படம் தான். இதில், 3 குழந்தைகளுடன் சேர்ந்து உட்கார்ந்திருக்கும் பெண் பார்ப்பதற்கு அச்சு அசல் போராளி கிரேட்டா தன்பெர்க் மாதிரியே இருக்கிறார்.

இதைப் பற்றி விசாரிக்கையில், இந்த புகைப்படம் 1898ஆம் ஆண்டு கனடாவில் உள்ள தங்கச்சுரங்கத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் எனக் கண்டறிந்துள்ளனர்.

படத்திலிருக்கும் சிறுமி, கிரேட்டா போல் இருப்பது சமூக வலைதளங்களில் அதிகளவில் பரவி வருகிறது. பல மக்கள் வாழும் உலகைக் காப்பாற்ற தான், டைம் ட்ராவல் செய்து கிரேட்டா வந்துள்ளார் என்று பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: உலகத் தலைவர்களைத் தெறிக்கவிடும் கிரேட்டா!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details