பிரபல தேடுபொறி இயந்திரமான கூகுள் தனது 21ஆவது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது. கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் விதமாகக் கூகுள் நிறுவனம் இன்று புதிய டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
உலகில் அனைத்து கேள்விகளுக்கும் பதில் தெரிந்து வைத்துள்ள கூகுளுக்கு அதன் பிறந்த தேதி சரியாகத் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. கூகுளின் தளத்தில் செப்டம்பர் 4ஆம் தேதி தொடங்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், 2002ஆம் ஆண்டு முதல் கூகுள் செப்டம்பர் 27ஆம் தேதி அதன் பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறது. இதனிடையே 2005ஆம் ஆண்டு மட்டும் கூகுள் செப்டம்பர் 26ஆம் தேதி அதன் பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.