அமெரிக்காவின் அடுத்த அதிபராகத் தேர்வுசெய்யப்பட்டுள்ள ஜோ பைடன் வரும் 20ஆம் தேதி பொறுப்பேற்கவுள்ளார். இந்தப் பதவியேற்பு விழாவில் தான் பங்கேற்கப்போவதில்லை என தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மரபை மீறி டொனால்ட் ட்ரம்ப் இப்படி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ள நிலையில், இதற்குப் பதிலடி தரும்வகையில், ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார். தனது பதவியேற்பு விழாவிற்கு ட்ரம்ப் வராதது நல்லததுதான் என்று கூறிய பைடன், இந்தவொரு விஷயத்தில் அவருடன் நானும் ஒத்துப்போகிறேன் எனக் கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.
இத்தகைய உயர் பொறுப்பிற்கு தகுதியற்ற ட்ரம்ப், உலகின் முன் அமெரிக்காவுக்கு அவமானத்தை தேடித் தந்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னதாக தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்ளாது முரண்டுபிடித்த ட்ரம்ப், தேர்தலில் முறைகேடு நடந்துவிட்டதாகப் பழிபோட்டுவந்தார்.
அத்துடன் அவரது ஆதரவாளர்கள் கடந்த வியாழன் அன்று அந்நாட்டு நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து சூறையாடினர். இது அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது அல்லாமல், உலகம் முழுவதும் பெரும் கலகத்தையும் ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்திற்குப் பின்னணியில் ட்ரம்பின் தூண்டுதல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'6 அடி உயரம் கம்பீரத் தோற்றம்' - தோப்பில் சிக்கிய பெண் சிலையில் நீடிக்கும் மர்மம்!