கரோனா கட்டுபடுத்தா விட்டால் உலகம் முழுவதும் உணவு பற்றாக்குறை ஏற்படும் என ஐ.நா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. அது தொடர்பாக ஐ.நா பொதுச்செயலாளர் உலகளாவிய உணவு அவசரநிலையைத் தவிர்ப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த அவர் கரோனா நோய் தோற்று காரணமாக 820 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பசியுடன் உள்ளனர், 5 வயதிற்குட்பட்ட சுமார் 144 மில்லியன் குழந்தைகள் வளர்ச்சியைக் குன்றியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
தற்போதைய கரோனா வைரஸ் நெருக்கடியை அரசாங்கம் நிர்வகிக்கத் தவறினால் உலகளாவிய உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. கரோனா ஊரடங்குகளுக்கு மத்தியில் குறிப்பாக உணவு பற்றாக்குறை அதிகரிக்காமல் இருக்க, முடிந்தவரை சுதந்திரமாக வர்த்தகம் செய்ய ஒவ்வொரு முயற்சியும் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.