சர்வதேச அளவில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கோவிட்-19 இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசி பயன்பாட்டிற்கான முதல்கட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
தற்போதைய பாதிப்பு நிலவரம் இதுவரை ஏழு கோடியே 60 லட்சத்து 41 ஆயிரத்து 466 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 லட்சத்து 81 ஆயிரத்து 682ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து கோடியே 33 லட்சத்து 9 ஆயிரத்து 94ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் ஏழு லட்சத்து 41 ஆயிரத்து 837 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 ஆயிரத்து 991 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்கா, பிரேசிலின் எண்ணிக்கை உலக அளவில் அதிக கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் சுமார் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அந்நாட்டில் ஒரு கோடியே 78 லட்சத்து 88 ஆயிரத்து 353 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று லட்சத்து 20 ஆயிரத்து 845 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் மூன்றாம் இடத்திலும் உள்ளது.
அதேவேளை உயிரிழப்பு அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரேசில் இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளது. பிரேசில் நாட்டில் தற்போது நோய்த்தொற்று எண்ணிக்கை 71 லட்சத்து 63 ஆயிரத்து 912 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழப்பும் ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 687ஆக உள்ளது.
ஸ்பெயின் நாட்டில் வரும் 27ஆம் தேதி முதல் தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அந்நாட்டின் சுகாதார அமைச்சர் சால்வதார் இலா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஆப்கானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் தாக்குதல்