சர்வதேச அளவில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கோவிட்-19 இரண்டாம் அலை தீவிரமடைந்துவருகிறது. அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசி பயன்பாட்டிற்கான முதல்கட்ட பணிகளை மேற்கொண்டுவருகின்றன.
தற்போதைய பாதிப்பு நிலவரம்
இதுவரை ஏழு கோடியே 45 லட்சத்து 60 ஆயிரத்து 962 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 லட்சத்து 55 ஆயிரத்து 758ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து கோடியே 23 லட்சத்து 95 ஆயிரத்து 275ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் ஏழு லட்சத்து 27 ஆயிரத்து 682 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 ஆயிரத்து 536 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்கா, பிரேசிலின் எண்ணிக்கை
உலக அளவில் அதிக கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் சுமார் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அந்நாட்டில் ஒரு கோடியே 73 லட்சத்து 94 ஆயிரத்து 314 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று லட்சத்து 14 ஆயிரத்து 629 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் மூன்றாம் இடத்திலும் உள்ளது. அதேவேளை உயிரிழப்பு அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரேசில் இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளது.
பிரேசில் நாட்டில் தற்போது நோய்த்தொற்று எண்ணிக்கை 70 லட்சத்து 42 ஆயிரத்து 695 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழப்பும் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 822ஆக உள்ளது.
இதையும் படிங்க:ஒரே மாதத்தில் 30 லட்சம் பிரதிகள் விற்பனை; சாதனை படைத்த ஒபாமாவின் புத்தகம்!