சர்வதேச அளவில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கோவிட்-19 இரண்டாம் அலை தீவிரமடைந்துவருகிறது. இதுவரை ஏழு கோடியே 32 லட்சத்து 12 ஆயிரத்து 302 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 லட்சத்து 28 ஆயிரத்து 442ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து கோடியே 13 லட்சத்து 53 ஆயிரத்து 862ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து லட்சத்து 57 ஆயிரத்து 700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒன்பதாயிரத்து 414 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் அதிக கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. இதுவரை அந்நாட்டில் ஒரு கோடியே 69 லட்சத்து 42 ஆயிரத்து 920 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று லட்சத்து எட்டாயிரத்து 91 பேர் உயிரிழந்துள்ளனர்.