உலக நாடுகளை மிரட்டும் கரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் பல முன்னணி நாடுகளே திணறி வருகிறது. வைரஸ் தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன.
உலகளவில் 7 கோடி பேருக்கு கரோனா பாதிப்பு - உலகளவில் கரோனா பாதிப்பு
உலகளவில் கரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஏழு கோடியே 7 லட்சத்து 45 ஆயிரத்து 886 ஆக உள்ளது. இதுவரை 15 லட்சத்து 88 ஆயிரத்து 911 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் உலகளவில் இதுவரை ஏழு கோடியே 7 லட்சத்து 45 ஆயிரத்து 886 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 லட்சத்து 88 ஆயிரத்து 91 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நான்கு கோடியே 91 லட்சத்து 72 ஆயிரத்து 205ஆக அதிகரித்துள்ளது.
உலகளவில் அதிகளவிலான கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. இதுவரை அந்நாட்டில் ஒரு கோடியே 60 லட்சத்து 39 ஆயிரத்து 393 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு லட்சத்து 99 ஆயிரத்து 692 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசிலில் 53 ஆயிரத்து 425 பேரும் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 34 ஆயிரத்து 666 பேர் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.