சர்வதேச அளவில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கோவிட்-19 இரண்டாம் அலை தாக்கம் மோசமடைந்துவருகிறது. இதுவரை ஆறு கோடியே 92 லட்சத்து 60 ஆயிரத்து 044 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 லட்சத்து 76 ஆயிரத்து 151ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நான்கு கோடியே 80 லட்சத்து 13 ஆயிரத்து 832ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் ஆறு லட்சத்து 91 ஆயிரத்து 366 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 ஆயிரத்து 019 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக அளவில் அதிக கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. குறிப்பாக இரண்டாம் அலைத் தாக்கம் அந்நாட்டில் கடும் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவருகிறது. இதுவரை அந்நாட்டில் ஒரு கோடியே 58 லட்சத்து 20 ஆயிரத்து 042 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு லட்சத்து 96 ஆயிரத்து 698 பேர் உயிரிழந்துள்ளனர்.