உலகளவில் அமெரிக்கா, ஐரோப்பியா உள்ளிட்ட நாடுகளில் கோவிட்-19 தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன.
தற்போதைய பாதிப்பு நிலவரம்
உலகளவில் தற்போதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எட்டு கோடியே 55 லட்சத்து 20 ஆயிரத்து 216 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 18 லட்சத்து 50 ஆயிரத்து 941 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் நான்கு லட்சத்து 91 ஆயிரத்து 352 பாதிப்புகளும், ஆறாயிரத்து 231 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. மொத்தமாக, ஆறு கோடியே நான்கு லட்சத்து 86 ஆயிரத்து 965 பேர் குணமடைந்துள்ளனர்.