தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கோவிட்-19 நிலவரம்: உலகளவில் 8.43 கோடி பேர் பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் நான்கு லட்சத்து 79 ஆயிரத்து 419 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழாயிரத்து 610 பேர் உயிரிழந்தனர்.

COVID-19 tracker
COVID-19 tracker

By

Published : Jan 2, 2021, 6:05 PM IST

சர்வதேச அளவில் அமெரிக்கா, ஐரோப்பியா உள்ளிட்ட நாடுகளில் கோவிட்-19 தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன.

தற்போதைய பாதிப்பு நிலவரம்

இதுவரை எட்டு கோடியே 43 லட்சத்து 82 ஆயிரத்து 650 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 லட்சத்து 35 ஆயிரத்து 399ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து கோடியே 96 லட்சத்து 42 ஆயிரத்து 271ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நான்கு லட்சத்து 79 ஆயிரத்து 419 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழாயிரத்து 610 பேர் உயிரிழந்தனர்.

சர்வதேச நாடுகளின் நிலவரம்

உலக அளவில் அதிக கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. இதுவரை அந்நாட்டில் இரண்டு கோடியே ஆறு லட்சத்து 17 ஆயிரத்து 346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று லட்சத்து 56 ஆயிரத்து 445 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் மூன்றாம் இடத்திலும் உள்ளன. அதேவேளை உயிரிழப்பு அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரேசில் இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளது.

இதையும் படிங்க:புத்தாண்டு தினத்தன்று பிறந்த குழந்தைகள் குறித்து யுனிசெப் அமைப்பு தகவல்

ABOUT THE AUTHOR

...view details