உலகளவில் அமெரிக்கா, ஐரோப்பியா உள்ளிட்ட நாடுகளில் கோவிட்-19 தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன.
தற்போதைய பாதிப்பு நிலவரம்
உலகளவில் தற்போது வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எட்டு கோடியே 39 லட்சத்து மூன்றாயிரத்து 231 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 18 லட்சத்து 27 ஆயிரத்து 789 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஐந்து கோடியே 94 லட்சத்து இரண்டாயிரத்து 197 பேர் குணமடைந்துள்ளனர்.
உலக அளவில் அதிக கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில், 2 கோடியே நான்கு லட்சத்து 45 ஆயிரத்து 654 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டில் மட்டும் இதுவரை மூன்று லட்சத்து 54 ஆயிரத்து 215 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே இரண்டு லட்சத்து 86 ஆயிரத்து 709 ஆக அதிகரித்துள்ளது.
மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 994 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனாவால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 98 லட்சத்து 83 ஆயிரத்து 461ஆக அதிகரித்துள்ளது.
பிரேசில் இரண்டாம் இடத்திலும், நான்காம் இடத்தில் ரஷ்யா, ஐந்தாம் இடத்தில் பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன.