சர்வதேச அளவில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கோவிட்-19 இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
தற்போதைய பாதிப்பு நிலவரம்
உலகளவில் ஏழு கோடியே 97 லட்சத்து 67 ஆயிரத்து 36 பேர் இதுவரை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 லட்சத்து 49 ஆயிரத்து 956ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து கோடியே 61 லட்சத்து 56 ஆயிரத்து 490ஆக அதிகரித்துள்ளது.