சர்வதேச அளவில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கோவிட்-19 இரண்டாம் அலை தீவிரமடைந்துவருகிறது. இதுவரை ஆறு கோடியே 36 லட்சத்து ஏழாயிரத்து 81 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 லட்சத்து 74 ஆயிரத்து 213ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நான்கு கோடியே 40 லட்சத்து 766ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் ஐந்து லட்சத்து 23 ஆயிரத்து 516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எட்டாயிரத்து 904 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் அதிக கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. இதுவரை அந்நாட்டில் ஒரு கோடியே 39 லட்சத்து 20 ஆயிரத்து 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு லட்சத்து 74 ஆயிரத்து 332 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் மூன்றாம் இடத்திலும் உள்ளது. அதேவேளை உயிரிழப்பு அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரேசில் இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளது.
பிரேசில் நாட்டில் தற்போது நோய்த்தொற்று எண்ணிக்கை 63 லட்சத்து 36 ஆயிரத்தை கடந்துள்ளது. உயிரிழப்பும் ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 165ஆக உள்ளது. துருக்கி நாட்டில் கோவிட்-19 பாதிப்பு மீண்டும் அதிகரிப்பதன் காரணமாக அங்கு இரவு நேர ஊரடங்கை அந்நாட்டின் அதிபர் எர்டோகன் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'1987-க்குப் பின் இப்படியொரு ஏற்றத்தைப் பார்த்ததே இல்லை' - அசந்துபோன முதலீட்டாளர்கள்