தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

உலகளவில் கரோனா பாதிப்பு நிலவரம்

கரோனா வைரஸ் பெருந்தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை 5 கோடியே 12 லட்சத்து 43 ஆயிரத்து 423-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 லட்சத்து 69 ஆயிரத்து 305 பேர் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

global
global

By

Published : Nov 10, 2020, 4:44 PM IST

சீனாவின் வூஹான் நகரில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்த வைரசால் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 5 கோடியே 12 லட்சத்து 43 ஆயிரத்து 423-க்கும் அதிகமானோருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 69 ஆயிரத்து 305 பேர் ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் இத்தொற்றால் இதுவரை மூன்று கோடியே 60 லட்சத்து 52 ஆயிரத்து 803 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உலகிலேயே அதிகளவு பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை ஒரு கோடியே 4 லட்சத்து 21 ஆயிரத்து 956 பேர் கரோனாவல் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 44 ஆயிரத்து 448 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது. நேற்றைய (நவ- 9) நிலவரப்படி மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 85 லட்சத்து 91 ஆயிரத்து 730 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1 லட்சத்து 27 ஆயிரத்து 104 பேர் உயிரிழந்துள்ளனர். 3 ஆவது இடத்தில் உள்ள பிரேசிலும், நான்காம் இடத்தில் ரஷியாவும் உள்ளது குறிப்பிடத்தக்க்து.

ABOUT THE AUTHOR

...view details