தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 28, 2020, 1:20 PM IST

ETV Bharat / international

கோவிட்-19: உலகளவில் 4.42 கோடி பேர் கரோனாவால் பாதிப்பு

உலகளவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4.75 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Global COVID-19 tracker
Global COVID-19 tracker

உலகளவில் கரோனா பரவல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இதுவரை நான்கு கோடியே 42 லட்சத்து 51 ஆயிரத்து 983 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 லட்சத்து 71 ஆயிரத்து 476ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியே 24 லட்சத்து 46 ஆயிரத்து 970ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நான்கு லட்சத்து 75 ஆயிரத்து 369 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 ஆயிரத்து 961 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் அதிகளவிலான கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. இதுவரை அந்நாட்டில் 90 லட்சத்து 38 ஆயிரத்து 030 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு லட்சத்து 32 ஆயிரத்து 084 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்த நோய் தொற்று பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. மொத்த உயிரிழப்பில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் பிரேசில் உள்ளது.

இதையும் படிங்க:கோவிட்-19இல் கோட்டைவிட்டு ஊடகங்கள் மீது ஆத்திரப்படும் ட்ரம்ப்: ஒபாமா குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details