ஹைதராபாத்:கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலகளவில் சுமார் 4 கோடியே 29 லட்சத்து 24 ஆயிரத்து 533 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் 11 லட்சத்து 54 ஆயிரத்து 761 பேர் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள 3 கோடியே 16 லட்சத்து 66 ஆயிரத்து 683 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
கரோனா பாதிப்பில் அமெரிக்கா மிக மோசமாக பாதிப்படைந்துள்ளது. அங்கு இதுவரை 88 ஆயிரத்து 27 ஆயிரத்து 932க்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இரண்டு லட்சத்து 30 ஆயிரத்து 68 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கரோனா பாதிப்பு விவரம் ஐரோப்பாவில், ஸ்பெயின் இந்த வாரத்தில் 10 லட்சம் கரோனா பாதிப்புகளைக் கடந்த முதல் நாடாக உள்ளது. தற்போதுவரை எட்டு நாடுகள் 10 லட்சம் கரோனா பாதிப்புகளைக் கடந்துள்ளது. அவற்றில் மூன்று நாடுகள் லத்தீன் அமெரிக்காவில் உள்ளன. பிரேசிலில் 50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கரோனா பாதிப்பில் பிரேசில் 3ஆவது இடத்தில் உள்ளது.
பல்வேறு நாடுகள், கரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றன. இதற்காக பல்வேறு கடுமையான நடவடிக்கைகளையும் அமல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.