தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 20, 2020, 3:07 PM IST

ETV Bharat / international

சர்வதேச கரோனா நிலவரம்: அர்ஜென்டினாவில் 10 லட்சத்தை கடந்த பாதிப்பு

உலகளவில் கடந்த 24 மணிநேரத்தில் மூன்று லட்சத்து 70 ஆயிரத்து 392 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்காயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

COVID-19 tracker
COVID-19 tracker

உலகளவில் கரோனா பரவல் தொடர்ந்து தீவிரமடைந்துவருகிறது. இதுவரை உலகளவில் நான்கு கோடியே ஆறு லட்சத்து 51 ஆயிரத்து 472 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 லட்சத்து 22 ஆயிரத்து 997ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியே மூன்று லட்சத்து 56 ஆயிரத்து 801ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மூன்று லட்சத்து 70 ஆயிரத்து 392 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்காயிரத்து 671 பேர் உயிரிழந்துள்ளனர். உலகில் அதிகளவிலான கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.

இதுவரை அந்நாட்டில் 84 லட்சத்து 56 ஆயிரத்து 653 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு லட்சத்து 25 ஆயிரத்து 222 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தீவிரத்தன்மை குறைந்துவரும் நிலையில், ஐரோப்பாவில் பெருந்தொற்றின் இரண்டாம் கட்ட அலை தீவிரமடைந்துவருகிறது.

அத்துடன் தென் அமெரிக்க நாடான அர்ஜென்டீனாவிலும் நோய்ப் பரவல் தீவிரமடைந்து மொத்த பாதிப்பு 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இதையும் படிங்க:டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

ABOUT THE AUTHOR

...view details