உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியை நெருங்கிவிட்டது. கரோனா பரவல் அதிகமாகவுள்ள நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அங்கு மொத்தமாக இதுவரை 80 லட்சத்து 94 ஆயிரத்து 576 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 20 ஆயிரத்து 904ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 52 லட்சத்து 27 ஆயிரத்து 279ஆகவும் உள்ளது.
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. இதுவரை 7 லட்சத்து 24 ஆயிரத்து 1,517 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 10 ஆயிரத்து 645ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 63 லட்சத்து 1 ஆயிரத்து 927ஆகவும் உள்ளது.