கரோனா வைரசின் பிறப்பிடமாக சீனா இருந்தாலும் அதன் மையப்பகுதியாக அமெரிக்கா மாறியுள்ளது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் புதிதாக இரண்டு லட்சத்து 16 ஆயிரத்து 856 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா பாதிப்பு! - கரோனா வைரஸ் இந்தியா
உலகளவில் நேற்று (ஜூலை 27) ஒரே நாளில் 2,16, 856 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 66 லட்சத்து 29 ஆயிரத்து 650ஆக அதிகரித்துள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 66 லட்சத்து 29 ஆயிரத்து 650 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் இப்பெருந்தொற்றால் நேற்று 3,833 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து இறப்பு எண்ணிக்கை ஆறு லட்சத்து 55 ஆயிரத்து 872 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இதுவரை ஒரு கோடியே இரண்டு லட்சத்து 17 ஆயிரத்து 539 பேர் இத்தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர். கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. நாட்டில் இதுவரை 14 லட்சத்து 82 ஆயிரத்து 503 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 33 ஆயிரத்து 448 பேர் உயிரிழந்துள்ளனர்.