உலக நாடுகளை மிரட்டும் கரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் பல முன்னணி நாடுகளே திணறி வருகிறது.
உலகளவில் கரோனாவால் 65 லட்சம் பேர் பாதிப்பு! - கொரோனா வைரஸ்
உலகளவில் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 65 லட்சத்து 67 ஆயிரமாக அதிகரித்துள்ளது..
![உலகளவில் கரோனாவால் 65 லட்சம் பேர் பாதிப்பு! corona](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11:41-7467481-pic-2.jpg)
இதுவரை உலகளவில் 65 லட்சத்து 67 ஆயிரத்து 58 பேர் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 87 ஆயிரத்து 899 ஆக அதிகரித்துள்ளது. வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 31 லட்சத்து 64 ஆயிரத்து 253 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் மட்டும் 92 ஆயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. உலகளவில் கரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது