உலக நாடுகளை மிரட்டும் கரோனா வைரசால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல வளர்ந்த நாடுகளும் கரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன.
நேற்று ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு! - கரோனா தாக்கம்
உலகளவில் நேற்று ஒரே நாளில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
![நேற்று ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு! corona](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12:44-7454203-129-7454203-1591159434110.jpg)
corona
இதுவரை உலகளவில் 64 லட்சத்து 74 ஆயிரத்து 75 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 81 ஆயிரத்து 718ஆக அதிகரித்துள்ளது. வைரசிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 66 ஆயிரத்து 835ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுள்ளனர். மூன்று மாதங்களாகியும் வைரசின் வீரியம் குறையாதது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.