உலக நாடுகளை ஆட்டிப்படைத்துவரும் கரோனாவுக்கு எதிராக தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்கும் நோக்கில் பல நாடுகளும் தீவிரம் காட்டிவருகின்றன.
இந்த நிலையில், உலகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் புதிதாக ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 572 பேருக்கு கரோனா தீநுண்மி இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால், உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 லட்சத்து ஐந்தாயிரத்து 415ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் இத்தொற்றால் நேற்று 4,592 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம், உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்து 62 ஆயிரத்து 24 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்ட 25 லட்சத்து 79 ஆயிரத்து 691 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
29 லட்சத்து 63 ஆயிரத்து 700 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். அவர்களில் 53 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
மற்ற நாடுகளைக் காட்டிலும் கரோனாவால் அதிக பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அமெரிக்காவில்தான் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 17 லட்சத்து 68 ஆயிரத்து 461 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு லட்சத்து மூன்றாயிரத்து 330 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து உலகளவில் அதிக பாதிப்புக்குள்ளான நாடுகளின் பட்டியலில் பிரேசில் (நான்கு லட்சத்து 38 ஆயிரத்து 812) இரண்டாம் இடத்திலும், ரஷ்யா (மூன்று 79 ஆயிரத்து 51) மூன்றாம் இடத்திலும் உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரையில் இப்பட்டியலில் ஒன்பதாவது (ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 386) இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க:மோடி அதிருப்தியில் உள்ளார் - ட்ரம்ப்