உலகளவில் 40 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு! - கரோனா வைரஸ் அமெரிக்கா
உலகம் முழுவதும் நேற்று புதிதாக 96,364 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதன் மூலம், பாதிப்பாளர்கள் எண்ணிக்கை 40 லட்சத்தைக் கடந்துள்ளது.
உலகளவில் 40 லட்சத்தை கடந்த கரோனா பாதிப்பு!
By
Published : May 9, 2020, 2:03 PM IST
உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கடந்தாண்டு இறுதியில் சீனாவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட இந்த வைரஸ் தற்போது அந்நாட்டில் குறைந்திருந்தாலும் மற்ற நாடுகளில் தீவிரமான நிலையை எட்டியுள்ளது.
அதிலும் குறிப்பாக, அமெரிக்காதான் இத்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உலகம் முழுவதும் நேற்று புதிதாக 96,364 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது மருத்துவ சோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,13,896ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம், இத்தொற்றால் நேற்று உலகம் முழுவதும் 5,515 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,76,235ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, இத்தொற்றிலிருந்து இதுவரை 13,85,412 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இத்தொற்றின் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவில் நேற்று புதிதாக ஒரு பாதிப்பு மட்டுமே கண்டறியப்பட்டது. இதனால், அந்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,887ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 78,046 பேர் குணமடைந்த நிலையில், 4,633 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தற்போது சீனாவில் 208 பேர் மட்டுமே சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்தியாவைப் பொறுத்தவரையில், இத்தொற்றால் 59,662 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1981 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 17,847 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கரோனா வைரஸ் அதிகம் பாதித்த முதல் 10 நாடுகளின் பட்டியலை பார்ப்போம்.