தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

உலகை உலுக்கும் கரோனா, 36 லட்சம் பேர் பாதிப்பு - உலகளவில் கரோனா பாதிப்பு

ஹைதராபாத்: உலகம் முழுக்க கரோனா வைரஸூக்கு இரண்டரை லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர்.

global covid29 tracker  coronavirus tracker global  coronavirus toll worldwide  covid19 tally global  இரண்டரை லட்சம் உயிரைக் குடித்த கரோனா  உலகளவில் கரோனா பாதிப்பு  கோவிட்-19 பெருந்தொற்று
global covid29 tracker coronavirus tracker global coronavirus toll worldwide covid19 tally global இரண்டரை லட்சம் உயிரைக் குடித்த கரோனா உலகளவில் கரோனா பாதிப்பு கோவிட்-19 பெருந்தொற்று

By

Published : May 4, 2020, 12:42 PM IST

Updated : May 4, 2020, 2:26 PM IST

புதிய வகை கரோனா வைரஸால் உருவான கோவிட்-19 பெருந்தொற்று நோயிக்கு, உலகம் முழுக்க 35 லட்சத்து 66 ஆயிரத்து 230 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழப்பை பொறுத்தமட்டில் இரண்டு லட்சத்து 48 ஆயிரத்து 285 ஆக உள்ளது. மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் 11 லட்சத்து 54 ஆயிரத்து 31 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் முதல் வரிசையில் உள்ளன. இந்த நாடுகளில் கடுமையான முழு அடைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுக்க கரோனா பாதித்த முதல் 10 நாடுகள்:

நாடுகள் பாதிப்பு இழப்பு
அமெரிக்கா 11,88,122 68,598
ஸ்பெயின் 2,47,122 25,264
இத்தாலி 2,10,717 28,884
இங்கிலாந்து 1,86,599 28,446
பிரான்ஸ் 1,68,693 24,895
ஜெர்மனி 1,65,664 6,866
ரஷ்யா 1,34,687 1,280
துருக்கி 1,26,045 3,397
பிரேசில் 1,01,826 7,051
ஈரான் 97,424 6,203

கரோனாவின் தொடக்கப்புள்ளியான சீனாவில் 82 ஆயிரத்து 880 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அங்கு 4,633 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: இந்தியாவில் கரோனா பாதிப்பு, மாநிலங்கள் வாரியாக தகவல்!

Last Updated : May 4, 2020, 2:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details