சீனாவில் கண்டறியப்பட்ட கோவிட் 19 தொற்று, தற்போது அந்நாட்டில் குறைந்திருந்தாலும் மற்ற நாடுகளில் வேகமாக பரவிவருகிறது. இதனால் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இத்தொற்றால் முதல் உயிரிழப்பு கடந்த ஜனவரி மாதத்தில் பதிவானதையடுத்து, பல நாடுகளில் மக்கள் நாளுக்கு நாள் கொத்து கொத்தாக உயிரிழந்து வருகின்றனர். மிகவும் எளிதாக பரவும் இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.
இந்நிலையில், நேற்று ஒரேநாளில் உலகம் முழுவதும் புதிதாக 80, 684 பேருக்கு இத்தொற்று இருப்பது உறுதியானது. இதன்மூலம், உலகம் முழுவதும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்து 80 ஆயிரத்தை கடந்துள்ளது. அதில், நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.