சீனாவின் வூஹான் நகரில் கடந்தாண்டு டிசம்பர் மாத இறுதியில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் (தீநுண்மி) கட்டுக்கடங்காமல் பரவி உலக நாடுகளைத் திக்குமுக்காடச் செய்துள்ளது.
இன்றைய நிலவரப்படி உலகளவில் இதுவரை 81 லட்சத்து 13 ஆயிரத்து 666 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில், நான்கு லட்சத்து 39 ஆயிரத்து 85 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். மேலும், 42 லட்சத்து 13 ஆயிரத்து 602 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கரோனாவால் வல்லரசு நாடான அமெரிக்காவே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி, பெரு ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இதனிடையே, மெக்சிகோவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் அங்கு வணிக நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், அங்கு கரோனாவின் தீவிரம் குறைந்தபாடில்லை.