உலக அளவில் தற்போது வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 கோடியே 2 லட்சத்து 59 ஆயிரத்து 245ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 17 லட்சத்து 58 ஆயிரத்து 759 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். 5 கோடியே 65 லட்சத்து 21 ஆயிரத்து 955 பேர் குணமடைந்துள்ளனர்.
அதிகபட்சமாக அமெரிக்காவில், 1 கோடியே 92 லட்சத்து 10 ஆயிரத்து 166 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டில் மட்டும் இதுவரை 3 லட்சத்து 38 ஆயிரத்து 263 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், அந்நாட்டின் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் ப்ளோரிடா மாகாணத்தில் பண்டிகையைக் கொண்டாடினார்.
புதிய வகை கரோனா பாதிப்பு