கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. உலகம் முழுவதும் 84,78,325 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் 3,80,532 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,573 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் கோவிட் - 19 மரபணு கண்டுபிடிப்பு! - கரோனா அமெரிக்க ஆராய்ச்சி
சார்ஸ்-கோவிட் 2 வகையின் மரபணுவை அமெரிக்க தேசிய மருத்துவ நூலகத்தின் மருத்துவ ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
research doctors
இந்நிலையில், இந்த தொற்று குறித்து ஆய்வு செய்துவரும் அமெரிக்க தேசிய மருத்துவ நூலகத்தின் ஆய்வாளர்கள், சார்ஸ்-கோவிட் 2 வகையின் மரபணுவை தற்போது கண்டிபிடித்துள்ளனர். இந்த மரபணுவை வைத்து அதன் வரலாறு, மிருகங்கள் இடமிருந்து மனிதர்களுக்கு ஏற்படும் பரவல், எதிர்காலத்தில் தொற்றின் வீரியம் உள்ளிட்டவற்றை கண்டறிய முடியும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் மேலும் 2,115 பேருக்கு கரோனா