தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

நியூயார்க்கில் 'காந்தி சூரிய மின்சக்தி பூங்கா'வை திறந்துவைத்த மோடி! - gandhi 150

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் 50 கிலோவாட் திறன்கொண்ட 'காந்தி சூரிய மின்சக்தி பூங்கா'வை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.

Gandhi Solar Park at UN Headquarters inaugurated by pm modi

By

Published : Sep 25, 2019, 11:24 AM IST

அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, தென் கொரியா அதிபர் மூன்-ஜே-இன் உள்ளிட்ட உலகத் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 'தற்கால உலகில் மகாத்மா காந்தி' என்ற பெயரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐக்கிய நாடுகள் சபைக்கான மகாத்மா காந்தியின் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

'காந்தி சூரிய மின்சக்தி பூங்கா'வைதிறந்து வைத்த மோடி

மேலும், நியூயார்க் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள காந்தி அமைதித் தோட்டத்தையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்க உள்ளார்.

இந்நிகழ்ச்சியில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் உள்ளிட்ட தலைவர்கள் காந்திக்கு மரியாதை செலுத்தினர்.

இதையும் பார்க்க : '2022க்குள் மரபுசாரா எரிசக்தி மூலம் 450 ஜிகாவாட் மின் உற்பத்தி' - பிரதமர் நரேந்திர மோடி உறுதி

ABOUT THE AUTHOR

...view details