தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அடுத்த ஆண்டு ஜி7 மாநாடு: ட்ரம்ப் அறிவிப்பு! - ஜி 7 மாநாடு கோல்ப் கிளப்பில் நடைபெறவுள்ளது

ஜி7 மாநாடு புளோரிடா மாகாணத்தில் உள்ள கோல்ப் சுற்றுலா மையத்தில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

G7 summit

By

Published : Oct 18, 2019, 11:44 AM IST

ஜி7 மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாடு அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ரிசார்ட்டில் நடக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ட்ரம்புக்கு அதிக வருவாய் ஈட்டித் தருவதில் கோல்ப் கிளப் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், இந்த மாநாடு அங்கு நடைபெறவுள்ளது.

புளோரிடா மாகாணத்தில் உள்ள கோல்ப் கிளப்பில் ஜி7 மாநாடு நடைபெறவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், பலரும் அதனை விமர்சனம் செய்து வருகின்றனர். கோல்ப் அதன் பொலிவை இழந்து வருகிறது, முன்பு போல் இல்லை. அரசியல் லாபத்திற்காக டிரம்ப் இதனை செய்வதாக எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க: குர்து இனத்தவர் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்: அமெரிக்கா நம்பிக்கை

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details