அறுதிப் பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்த பிரதமர் நரேந்திர மோடி முதன் முறையாக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். செப். 21 முதல் 27ஆம் தேதிவரை நீளும் இப்பயணத்தில் ஐநா பொதுக்கூட்டம் உள்ளிட்ட முக்கிக் கூட்டங்களில் மோடி பங்கேற்பார்.
இதையும் படிங்க: அமெரிக்கா பறக்கும் மோடியின் பயண அட்டவணை!
இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக நாளை (செப். 22ஆம் தேதி) டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் 'ஹவுடி மோடி!' என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அமெரிக்கா வாழ் இந்தியர்களுடன் உரையாற்றவுள்ளார். இதில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் கலந்துகொள்வார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று ஹூஸ்டனில் வைக்கப்பட்டுள்ள பேனர் இந்நிலையில், இந்த நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்துக்கு வெளியே காலிஸ்தான் (பஞ்சாப் தனிநாடு கோரி போராடிவரும் பிரிவினைவாத இயக்கம்), காஷ்மீரிகள் பிரதமர் மோடிக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து ஹூஸ்டனில் வாழும் இந்தியர்கள் சிலரிடம் கேட்டபோது, "இந்தப் போராட்டக்காரர்கள் உண்மையில் காஷ்மீரிகள் அல்ல; காஷ்மீர் மொழிகளைக் கூட அவர்கள் பேசுவதில்லை. காஷ்மீரிகள் என்னும் பெயரில் பாகிஸ்தானியர்கள் செய்யும் பொய்ப்பரப்புரையே இது" என்றனர்.
உலக காஷ்மீரி பண்டிட் அமைப்பைச் சேர்ந்த மோகன் சப்ரூ பேசுகையில், "காஷ்மீரிகளை கிஞ்சித்தும் மதிக்காத ஜிகாதி கொள்கையுடைய பயங்கரவாத இஸ்லாமிய அமைப்புகள், காஷ்மீரில் குறித்து மக்களிடையே பொய்ப் பரப்புரை செய்துவருகின்றனர். காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு நேர்ந்த இனப்படுகொலை குறித்து அவர்கள் பேசமாட்டார்கள்.
காஷ்மீரில் நடைபெறும் இஸ்லாமிய பயங்கரவாதம் குறித்த முழு விவரம் அமெரிக்க அரசியல்வாதிகளுக்கோ, மேற்கத்திய ஊடகங்களுக்கோ தெரியாது" என்றார்.