தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

நியூயார்க்கில் துப்பாக்கிச் சூடு -  4 பேர் உயிரிழப்பு! - International Latest news

வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

NEWYORK SHOOTOUT

By

Published : Oct 12, 2019, 11:53 PM IST

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள புரூக்லின் பகுதியில் இன்று காலை (உள்ளூர் நேரம்) துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது.

இந்தச் சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிஎன்என் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நியூயார்க் காவல் துறையினர், "புரூக்லின் நகரில் உள்ள 74 யூடிகா சாலையில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவமானது நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக யாரையும் இன்னும் கைது செய்யவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் நியூயார்க் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு: பெண் உள்பட 2 பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details