அமெரிக்காவில் புளொரிடா பகுதியில் வசித்துவருகிறார் டென்னிஸ். இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு 11.30 மணியளவில் தனது வீட்டின் பின்பகுதியில் வித்தியாசமான சத்தம் கேட்டதால் சென்று பார்த்துள்ளார். அப்போது திடீரென்று புதரிலிருந்து ஒரு நபர் துள்ளிக் குதித்தவுடன் பயத்தில் யார் என்று தெரியாமல் உடனடியாக டென்னிஸ் சுட்டு விட்டார்.
இதனையடுத்து அந்நபர் யார் என்று டென்னிஸ் பார்த்தபோது, மிகப் பெரிய அதிர்ச்சியில் உறைந்து போனார். டென்னிஸால் சுட்டுக் கொல்லப்பட்ட அந்நபர் வேறு யாருமில்லை; அவருடைய சொந்த மருமகன் கிறிஸ்டோபர் பெர்கன்தான். இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பெர்கனை பரிசோதித்த மருத்துவர்கள் குண்டு சரியாக நெஞ்சுப் பகுதியால் பாய்ந்த காரணத்தினால் அதிகப்படியான ரத்தம் வெளியேறி பெர்கன் இறந்து விட்டார் எனத் தெரிவித்தனர்.