அமெரிக்காவின் தென்-கிழக்கு கடலோர மாகாணமான புளோடிவில் உள்ளது பிளான்டேஷன் நகரம். இங்கு வர்த்தக அங்காடியில் உள்ள உணவகத்தில், திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது.
இதனால், அந்த உணவகம் அமைந்திருந்த கட்டடம் சுக்கு நூறாய் நொருங்கி விழுந்து, அந்த இடமே தூசியும், புகை மண்டலமாய் காட்சியளித்தது. இதில், குழந்தைகள் உட்பட 21 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசாமக எந்த உயர்சேதமும் ஏற்படவில்லை.