தமிழ்நாடு

tamil nadu

பூமியில் பிஸ்கட் தயாரிக்க 20 நிமிடம்னா விண்வெளியில் தயாரிக்க எவ்வளவு நேரமாகும்?

By

Published : Jan 24, 2020, 1:40 PM IST

கேப் கேனாவரால்: முதல் முறையாக விண்வெளியில் சாக்லேட் பிஸ்கட் தயாரித்து விண்வெளி வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.

First space-baked cookies took 2 hours in experimental oven
First space-baked cookies took 2 hours in experimental oven

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சாக்லேட் சிப்ஸ் பிஸ்கட் தயாரித்து பரிசோதனை செய்ய நாசா திட்டமிட்டிருந்தது. இதனைத் தயாரிக்கும் மைக்ரோ ஓவனை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விண்வெளி நிலையத்திற்கு, அமெரிக்காவின் விர்ஜினியாவில் உள்ள வால்லோப்ஸ் தீவிலிருந்து ராக்கெட் மூலம் நாசா அனுப்பிவைத்தது. இதனுடன் 3,700 டன் எடையுள்ள கார் உதிரி பாகங்கள், கார்களில் பயன்படுத்தும் கார்பன் பைப்பர் உள்ளிட்ட பொருள்களும் அனுப்பிவைக்கப்பட்டன.

கடந்தாண்டிலிருந்து முயற்சிசெய்து ஒருவழியாக சாக்லேட் பிஸ்கட்டை விண்வெளி வீரர்கள் உருவாக்கியுள்ளனர். அந்த பிஸ்கட்டை தயாரிக்க 2 மணி நேரம் எடுத்துக்கொண்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை பூமியில் தயாரிக்க 20 நிமிடங்கள்தான் ஆகும் எனவும் கூறப்பட்டுள்ளது. இச்சோதனை முயற்சி வெற்றியடைந்துள்ளதால் விண்வெளி வீரர்களும் நாசாவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விண்வெளியில் தயாரிக்கப்பட்ட முதல் உணவு இதுவாகும்.

இதையும் படிங்க: பாம்புகளிடமிருந்து பரவும் கொரோனா வைரஸ்?

ABOUT THE AUTHOR

...view details