தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமெரிக்காவில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ: போராடும் தீயணைப்பு வீரர்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவில் தற்போது கடுமையான கோடைக்காலம் நிலவிவரும் சூழலில், டூசன் வனப்பகுதியில் காட்டுத்தீ அதிவேகமாகப் பரவிவருகிறது.

Wildfire
Wildfire

By

Published : Jun 13, 2020, 5:35 PM IST

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள டூசன் பகுதியில் மிகப்பெரிய வனப்பகுதிகள் உள்ளன. அங்கு தற்போது கோடைக்காலம் நிலவிவருகிறது. இதனால் அங்கு 42 டிகிரி செல்சியசுக்கும் அதிகமான வெப்பம் நிலவிவருவதால், அங்கு காட்டுத்தீ ஏற்படுவது வழக்கமாகியுள்ளது.

அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் இந்தக் கோடைக்காலமானது மேலும் சில மாதங்கள் தொடரும் எனத் தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்தக் காட்டுத்தீ பரலைத் தடுக்கும் விதமாக தீயணைப்பு வீரர்கள் துரிதமாகக் களமிறக்கப்பட்டு, தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை சுமார் 17 சதுர கிலோமீட்டர் அளவிற்கான காடுகள் தீக்கிரையாகியுள்ளன. இதன் கானொலிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. இதனைக் கண்டு சூழியல் ஆர்வலர்கள் பலர் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

கட்டுக்கடங்காத காட்டுத்தீ

இதையும் படிங்க:மூன்றாம் பாலினத்தவரின் சுகாதாரச் சேவைகளில் மாற்றம் மேற்கொண்ட ட்ரம்ப் அரசு!

ABOUT THE AUTHOR

...view details