குறுகிய காலத்தில் இணைய பயன்பாடு பிரமாண்ட வளர்ச்சி அடைந்தாலும், உலகளவில் சுமார் 3.5 பில்லியன் மக்களுக்கு இணைய சேவை இல்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக இணையத்தைப் பயன்படுத்தும் மக்கள் சராசரியாக உபயோகிக்கும் தரவை ஆண்டிற்கு 20 முதல் 30 விழுக்காடு அதிகரிப்பதாக ஆய்வு முடிவு தெரிகிறது.
இதைக் கருத்தில் கொண்டு, இணைய பயனர்கள் அதிகரிப்பதால் வேகத்தில் தளர்வு ஏற்பட கூடாத காரணத்திற்காக அதிவேக இன்டர்நெட் ஸ்பீடு தரும் பைபர் கேபிளைஸ் நிறுவும் பணியில் ஃபேஸ்புக் களமிறங்கியுள்ளது.
இதற்காக, Bombyx என அழைக்கப்படும் ரோபோட்டை அறிமுகம் செய்துள்ளனர். இந்த ரோபோட் மின் வயர்களில் நடந்தப்படியே பைபரை நிறுவும் வகையில் வடிவமைத்துள்ளனர். இதுதொடர்பாக பேஸ்புக் வெளியிட்டுள்ள அறிக்கையில், " வீட்டிற்கு தேவையான மின்சாரத்தை வழங்க மின் விநியோக மைத்திலிருந்து வரும் மின் வயர்களை பயன்படுத்தி, வீட்டிற்கு தேவையான இணைய சேவையை அதிநவீன வேகத்தில் கிடைக்க திட்டமிட்டுள்ளோம்.