தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

டிக்டாக் பதிவிறக்கத்திற்கு ட்ரம்ப் விதித்த தடையை ஒத்திவைத்த நீதிபதி! - அதிபர் ட்ரம்ப் உத்தரவை ஒத்திவைத்த நீதிபதி நிகோல்ஸ்

நியூயார்க்: பிரபலமான டிக்டாக் செயலியை பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்வதற்கு அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் நள்ளிரவில் விதித்த தடையை, நீதிபதி தற்காலிகமாக ஒத்திவைத்தார்.

ik
ik

By

Published : Sep 28, 2020, 9:56 PM IST

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான பைட் டான்ஸ் நிறுவனத்தின் டிக்டாக் செயலிக்கு, அமெரிக்காவில் மட்டும் சுமார் 10 கோடி பயனர்கள் உள்ளனர். இந்நிலையில், அமெரிக்கர்களின் தரவுகளை டிக்டாக், வி-சாட் செயலிகள் திருடுவதாக எழுந்த புகாரையடுத்து, அமெரிக்காவில் இரண்டு செயலிகளுக்கும் தடைவிதிக்க முடிவுசெய்யப்பட்டது.

இருப்பினும், 90 நாள்களுக்குள் டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை அமெரிக்கா நிறுவனத்திற்கு விற்றுவிட்டால் தடைவிதிக்கப்படாது என அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இதையடுத்து, டிக்டாக் செயலியை வாங்குவதற்கு பல அமெரிக்க நிறுவனங்கள் களத்தில் இறங்கின.

இறுதியாக ஆரக்கிள் நிறுவனம் டிக்டாக் செயலியை வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால், அந்த ஒப்பந்தத்தின்படி பெரும்பாலான பங்குகள் பைட் டான்ஸிடமே இருந்துள்ளது. குறைந்த அளவிலான பங்குகள் மட்டும் ஆரக்கிளிடம் உள்ளதை ஏற்க முடியாது என அதிபர் ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதுமட்டுமின்றி, அமெரிக்காவில் செப். 27ஆம் தேதிமுதல் டிக் டாக், விசாட் செயலிகளை பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யமுடியாது என்று அறிவித்தார். விசாட் செயலிக்கு உடனடியாகத் தடைவிதிப்பதாகவும், டிக்டாக் செயலியை நவம்பர் 12ஆம் தேதி உபயோகிக்கலாம் - ஆனால், புதிய அப்டேட் செய்திட முடியாது எனத் தெரிவித்தார். இது தொடர்பாக பைட் டான்ஸ் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தது.

இந்நிலையில் இன்று, இவ்வழக்கு நீதிபதி கார்ல் நிக்கோல்ஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பைட் டான்ஸ் தரப்பு வழக்குரைஞர் பேசுகையில், "பிளே ஸ்டோரிலிருந்து செயலியை அகற்றுவது புதிய வெர்ஷன்களை வெளியிட முடியாத நிலை உருவாகியுள்ளது. செயலியை வைத்திருக்கும் 10 கோடி அமெரிக்கர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்" எனத் தெரிவித்தனர்.

இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி, டிக்டாக் செயலியை பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை தற்காலிகமாக ஒத்திவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details