கடந்த புதன்கிழமை (ஜூலை 15ஆம் தேதி) அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், டெஸ்லா தலைமை நிர்வாக அலுவலர் எலோன் மஸ்க், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ் மற்றும் ஆப்பிள் நிறுவன தலைமை நிர்வாக அலுவலர் உள்ளிட்ட முக்கிய நபர்களின் ட்விட்டர் கணக்குகள் ஒரே நேரத்தில் ஹேக் செய்யப்பட்டன.
சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பெரும் இணையவழித் தாக்குதல் குறித்து விசாரணையை மேற்கொள்ளும் பொறுப்பு எஃப்.பி.ஐ(Federal Bureau of Investigation- FBI)யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இது தொடர்பாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (WSJ) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள குறிப்பில், "ட்விட்டர் நிறுவனத்தின் அமைப்புகளில் நிலவும் குறைபாடுகள், சர்வதேச பாதுகாப்புக்குப் பரந்த ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது.
இதன் காரணமாக ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க அமெரிக்காவின் தலைமை உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்பான எஃப்.பி.ஐயிடம் இது குறித்த விசாரணையைத் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
மணிக்கணக்கில் நீடித்த இந்த ஹேக் குறித்து ட்விட்டர் சமூக வலைதளம் விவரங்களை வெளியிடவில்லை என்றாலும், பாதுகாப்பு வல்லுநர்கள் இந்தத் தாக்குதல் நிறுவனத்தின் உள் கணக்கு-மீட்டமைப்பு அமைப்புகளில் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். அவை பயனர்கள் தங்களது கணக்குகளை இழந்தபின்னர், தங்கள் கணக்குகளுக்கான அணுகலை மீண்டும் பெற, உடனடியாக உதவும் வகையில், வடிவமைக்கப்பட வேண்டும்.