அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கரோனா பரவலின் இரண்டாவது அலை காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஏபிசி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அமெரிக்க தொற்றுநோய் வல்லுநர் அந்தோணி ஃபவுசி பேசுகையில், "தேங்கஸ் கிவ்விங் டே-க்கு பின் குளிர் காலம் காரணமாகவும் பயணம் காரணமாகவும் கரோனா பரவல் வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கக் கூடும்.
மக்களை அச்சப்படுத்த நான் இதைக் கூறவில்லை. ஆனால் இதுதான் எதார்த்தம். தேங்க்ஸ் கிவ்வி டே கொண்டாட்டம் காரணமாக அனைவரும் சொந்த ஊர்களுக்கு சென்றிருப்பார்கள். எனவே, இப்போது நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் பயணத்தில் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம்.