தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமெரிக்கா விரைவில் நாளொன்றுக்கு, 10 லட்சம் தடுப்பூசிகளை வழங்கும்!

அமெரிக்கா கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் தடுப்பூசிகளை நாளொன்றுக்கு ஒரு மில்லியன் (10 லட்சம்) அளவில் விநியோகிக்கும் என மருத்துவர் அந்தோனி பௌசி கூறியுள்ளார்.

Fauci: US could soon give 1 million vaccinations a day
Fauci: US could soon give 1 million vaccinations a day

By

Published : Jan 6, 2021, 11:35 AM IST

வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த 14ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி விநியோகிக்கப்பட்டு வருகிறது. இவை தற்போது மெதுவான வேகத்தில் விநியோகிக்கப்படுவதாக மக்கள் கூறிவந்தனர். மேலும், தங்களின் நம்பிக்கையை ஏமாற்றமடையச் செய்வதாகவும் கூறினர்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க மருத்துவர் அந்தோனி பௌசி, "கடந்த மாதம் 14ஆம் தேதி முதலே அமெரிக்காவில் தடுப்பூசி விநியோகம் செய்ய ஆரம்பிக்கப்பட்டன.

அவை தற்போது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது அவை அரை மில்லியன் ஊசிகளை விநியோகித்துள்ளன. இந்த நடைமுறை சிறிது சிறிதாக அதிகரிக்கப்பட்டு, நாளொன்றுக்கு ஒரு மில்லியன் ஊசிகள் விநியோகிக்கப்பட உள்ளன.

இவை தொடர்ந்தால், 100 நாள்களில் 100 மில்லியன் (10 கோடி) தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும் என்ற ஜோ பிடனின் இலக்கை வெகுவாக எட்டலாம்" என்றார்.

இதையும் படிங்க:உலகிலேயே இந்தியாவில்தான் மிகப்பெரிய அளவில் தடுப்பூசி விநியோகம் - பிரதமர் மோடி பெருமிதம்

ABOUT THE AUTHOR

...view details