அமெரிக்காவின் முன்னணி பெருந்தொற்று நிபுணரான ஆன்டனி பாச்சி, அந்நாட்டின் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்தியா குறித்து பேசியுள்ளார். கோவிட்- 19 இரண்டாம் அலையில் இந்தியா தத்தளித்து வரும் நிலையில், இதனை எதிர்கொள்வது குறித்து அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஆன்டனி பாச்சி, ”கோவிட்-19 பாதிப்பை முடிவுக்கு கொண்டுவர அனைவருக்கு தடுப்பூசி செலுத்துவதே வழி. இந்தியாவுக்கு நீண்டகாலத் தீர்வை தடுப்பூசிதான் தரும்.