தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஜோ பைடன் அழைப்பை ஏற்ற ஃபவுசி! - வெள்ளை மாளிகை

வாஷிங்டன்: தனது தலைமை மருத்துவ ஆலோசகராக இருக்க ஃபவுசிக்கு பைடன் அழைப்பு விடுத்திருந்த நிலையில், அந்த அழைப்பை இன்று ஃபவுசி ஏற்றுக்கொண்டார்.

Fauci accepts Biden's offer
Fauci accepts Biden's offer

By

Published : Dec 5, 2020, 2:56 PM IST

சமீபத்தில் ஜோ பைடன் அளித்த பேட்டியில், கடந்த வாரம் நான் ஃபவுசியை நேரில் சந்தித்தேன். தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய் நிறுவனத்தின் இயக்குநராக தொடர்ந்து பதவியில் இருக்கும்படி கேட்டுக்கொண்டேன். மேலும், எனது தலைமை மருத்துவ ஆலோசகராகவும் இருக்கும்படி அவரை கேட்டுக்கொண்டேன் என்றார்.

இந்நிலையில், இதுகுறித்து அமெரிக்க தொற்றுநோய் வல்லுநர் அந்தோணி ஃபவுசியிடம் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், நான் அந்த இடத்திலேயே அவரது அழைப்பை ஏற்றுக்கொண்டேன் என்றார்.

கரோனா பரவ தொடங்கியபோது, அமெரிக்காவில் அதை கட்டுப்படுத்த அதிபர் ட்ரம்ப் டாஸ்க் ஃபோர்ஸ் ஒன்றை அமைத்தார். நாட்டில் வைரஸ் பரவலை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது இந்த குழுவின் பொறுப்பாகும்.

இந்த குழுவில் முக்கிய நபராக அந்நாட்டின் முக்கிய தொற்று நோய் வல்லுநராக அறியப்படும் அந்தோணி ஃபவுசியும் இடம் பெற்றிருந்தார். இருப்பினும், குழு அறிவிக்கப்பட்ட சில வாரங்களிலேயே அதிபர் ட்ரம்ப்பிற்கும் ஃபவுசிக்கும் இடையே மோதல் ஏற்பட தொடங்கியது.

ஃபவுசி 1984ஆம் ஆண்டு முதல் அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களின் இயக்குநராக பணியாற்றிவருகிறார்.

இதையும் படிங்க: கரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வது கட்டாயமாக்கப்படாது - ஜோ பைடன்

ABOUT THE AUTHOR

...view details