தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

"இனி உன் இன்ஸ்டா, வாட்ஸ்அப் என்னோட கன்ட்ரோல்"- மகளுக்குத் தந்தையின் விநோத தண்டனை! - father gave different punishment for daughter

ஆஸ்டின்: தவறு செய்த மகளுக்குத் தண்டனையாக மகளின் சமூக வலைதளத்தை இரண்டு வாரத்திற்கு தந்தை உபயோகிக்கும் பழக்கம் ஆச்சரியப் படுத்தியுள்ளது.

Father takes over daughter's social media
தண்டனை

By

Published : Dec 4, 2019, 7:36 PM IST

Updated : Dec 4, 2019, 7:46 PM IST

அமெரிக்கா நாட்டின் டெண்டோன் பகுதியில் வசித்து வருபவர்கள் தவான்யா ஃபோர்டு - லாரி சம்ப்டர் தம்பதியினர். இவர்களுக்கு மதிலின் (15) என்ற மகள் உள்ளார். சில நாட்களுக்கு முன்பு தனது மகள் இளைஞர்களை ஸ்லீப் ஓவர் விருந்துக்கு வீட்டிற்கு வரவழைத்ததைப் பெற்றோர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால், மகளுக்கு என்ன தண்டனை வேண்டுமென இரண்டு வாய்ப்புகளை தந்தை வழங்கியிருக்கிறார்.

இரண்டு விநோத தண்டனை

மகளிடம் 'ஒரு மாதத்திற்கு செல்போன் இல்லாமல் இருக்க வேண்டும்' அல்லது 'இரண்டு வாரங்கள் மட்டும் செல்போன் என்னிடம் கொடுத்தால் போதும். ஆனால், சமூக வலைதளங்கள் என்னோட கட்டுப்பாட்டில் இருக்கும்' எனக் கேட்டுள்ளார். இதற்கு நன்கு யோசித்த மதிலின், இரண்டாவது தண்டனையை ஏற்றுள்ளார். இதனையடுத்து மகளின் செல்போன் தந்தையின் முழுக் கட்டுப்பாட்டில் சென்றது.

தந்தையின் சேட்டை ஆரம்பம்

மகளின் செல்போன் கிடைத்ததும், முதல்கட்டமாக தண்டனை பற்றி அவளின் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். பின்னர் தனது குறும்புகாரச் சேட்டைகளை ஆரம்பித்துள்ளார். மகளின் உடைகளை அணிந்து கொண்டு புகைப்படம் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார், அந்த தந்தை.

லைக்ஸில் மகளை மிஞ்சிய தந்தை

இதில் முக்கியமானது, தந்தை மகளின் உடையில் பதிவிட்ட புகைப்படங்களுக்கு மகளுக்குக் கிடைத்த லைக்ஸ்களை விட அதிக லைக்ஸ் கிடைத்துள்ளது. மேலும், சில தினங்களில் சமூக வலை தளங்கில் தவான்யா ஃபோர்டு ட்ரெண்டாகியும் ஆச்சரியப் படுத்தினார்.

தண்டனை ஆரம்பித்த ஒரு நாள் முடிவடைந்த நிலையில், மகள் ஒரு மாத கால தண்டனையை நான் ஏற்றுக்கொள்கிறேன் எனக் கேட்டுள்ளார். ஆனால், 'அவர் முடியாது... முடிவு செய்ததில் மாற்றம் செய்ய முடியாது’ என மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "உலகின் நீளமான தேசியக் கொடி" - வானத்தில் பறந்த 5 ஸ்கை டைவிங் வீரர்களின் உலகச் சாதனை!

Last Updated : Dec 4, 2019, 7:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details