தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'தவறான தகவல் பதிவிட்டால் அதிபராக இருந்தாலும் நீக்கிவிடுவோம்' - ஃபேஸ்புக் அதிரடி!

நியூயார்க்: ஃபேஸ்புக்கில் வெறுக்கத்தக்க பேச்சு அல்லது தவறான தகவல்கள் பதிவிட்டால் அதிபராக இருந்தாலும், அந்தப் பதிவு உடனடியாக நீக்கப்படும் என ஃபேஸ்புக் தலைமை இயக்க அலுவலர் ஷெரில் சாண்ட்பெர்க் தெரிவித்துள்ளார்.

அதிபர்
அதிபர்

By

Published : Aug 20, 2020, 2:04 PM IST

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுவதையோட்டி, ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் தவறான செய்திகள் பரவக்கூடாது என்பதற்காக ஃபேஸ்புக் நிறுவனம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அனைவரின் பதிவுகளும் சரியானதா என்பதை தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

சமீபத்தில் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த ஃபேஸ்புக் தலைமை இயக்க அலுவலர் ஷெரில் சாண்ட்பெர்க், "ஃபேஸ்புக் தளத்தில் வெறுக்கத்தக்க பேச்சு அல்லது தவறான தகவல்கள் பதிவிட்டால் அதிபராக இருந்தாலும் அந்தப் பதிவு உடனடியாக நீக்கப்படும். குறிப்பாக தேர்தலில் வாக்கு பெறுவதற்காக அதிபர், கரோனா தொற்று குறித்து தவறான தகவல் பதிவிட்டால் உடனடியாக கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு பதிவு நீக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த வாரம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "பள்ளிகளை தற்போது திறக்கலாம். குழந்தைகளுக்கு வலுவான எதிர்ப்புச் சக்தி உள்ளதால், கரோனா தொற்றுக்கு எளிதில் ஆளாக மாட்டார்கள்" எனத் தெரிவித்திருந்தார்‌.

இவரின் பேச்சுக்குப் பல மருத்துவ நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தவறான தகவல் என உறுதிபடுத்திய பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் உடனடியாக அதிபரின் பதிவை நீக்கியது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details