கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக பல நாடுகளில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதனால், மக்கள் இணையத்தில் உலாவும் நேரமும் கணிசமாக உயரத் தொடங்கியது. இதை டார்கெட் செய்த சிலர், போலி செய்திகளைப் பதிவிட்டு மக்களைத் திசை திருப்புவதும், பணம் சம்பாதிப்பதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதைக் கருத்தில் கொண்டு ஃபேஸ்புக் நிறுவனம், தவறான தகவல் பரவுவதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) என்கிற ஒரு முக்கியமான நுட்பத்தை உபயோகித்தது. இதன்மூலம் செய்திகளின் உள்ளடக்கத்தை மதிப்பாய்வு செய்து, உண்மையான செய்திகளை எளிதில் கண்டறிய முடியும். மேலும், பல மொழிகளில் செய்திகள் உலாவுவதால் உண்மையைக் கண்டறிய உலகெங்கிலும் உள்ள 60க்கும் மேற்பட்ட உண்மைச் சரிபார்ப்பு நிறுவனங்களுடன் (fact-checking organizations) ஃபேஸ்புக் இணைந்து பணியாற்றுகிறது.