தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஃபைசரின் கோவிட் -19 தடுப்பூசி 90% சிறந்த தீர்வை அளிக்கிறது - ஆய்வு தகவல் - பயோயென் டெக் நிறுவனம்

வாஷிங்டன் : அமெரிக்காவைச் சேர்ந்த ஃபைசர், பயோயென் டெக் ஆகிய நிறுவனங்கள் கூட்டாக தயாரித்த கரோனா தடுப்பூசி மருந்து 90 விழுக்காடு சிறப்பாக செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஃபைசரின் கோவிட் -19 தடுப்பூசி 90% சிறந்த தீர்வை அளிக்கிறது - ஆய்வு தகவல்
ஃபைசரின் கோவிட் -19 தடுப்பூசி 90% சிறந்த தீர்வை அளிக்கிறது - ஆய்வு தகவல்

By

Published : Nov 10, 2020, 4:40 PM IST

உலகளவிய அச்சுறுத்தலாக மாறியுள்ள கோவிட்-19 பாதிப்பை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கவும் பல்வேறு நாடுகள் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. அந்த வகையில், கரோனா தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகள் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஃபைசர், பயோயென் டெக் ஆகிய நிறுவனங்கள் கூட்டாக தயாரித்த கரோனா தடுப்பூசி பரிசோதனைகள் மூன்றாம் கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தடுப்பூசி 90 விழுக்காடு சிறப்பாக செயல்படுவதாக அந்நாட்டின் தலைசிறந்த தொற்று நோய்கள் சிகிச்சை வல்லுநர் அந்தோனி ஃபௌசி தெரிவித்துள்ளார்.

ஃபைசர் நிறுவனத்தின் பங்கும், தடுப்பூசி தொடர்பான பார்மா நிறுவனங்களின் பங்குகளும் இதன் காரணமாக அமெரிக்க பங்கு சந்தையில் எதிர்ப்பாராத அளவு வளர்ச்சியடைந்துள்ளன.

இது குறித்து ஃபைசர் நிறுவனத்தின் தலைவரும், தலைமைச் செயல் அலுவலருமான ஆல்பர்ட் ஃபௌர்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவிட்-19 தடுப்பூசியின் மூன்றாம் கட்டப் பரிசோதனைகளுக்கான முதல்கட்ட முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளன. அந்த முடிவில் எங்களது தடுப்பூசி கோவிட்-19 வைரஸுக்கு எதிராக முழு திறனுடன் போராடும் வல்லமை பெற்றுள்ளது என தெரியவந்துள்ளது.

இந்த செய்தி உலக மக்களுக்கு மிகுந்த மகிழ்வையும், நம்பிக்கையையும் வழங்கும். நடப்பாண்டு மட்டும் உலகம் முழுவதும் 50 மில்லியன் தடுப்பூசி டோஸ்களை தயாரித்து வழங்க முடியும் என நம்புகிறோம். அடுத்தாண்டு 1.3 பில்லியன் டோஸ்கள் வழங்க முடியும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏறத்தாழ ஒன்பது மாதங்களுக்கு பிறகு அமெரிக்காவில் நிலவி வந்த அரசியல் மற்றும் அறிவியல் குழப்பங்களுக்கு தீர்க்கமான தீர்வெட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details